தம்புள்ளை தித்தவெல்கொல்ல என்ற இடத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
இரவு நேரம் படுக்கையில் இருந்தவாரே இவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ள பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
உயிரிழந்தவர் கலேவல வலயக் கல்விக்காரியாலயத்தில் முகாமைத்துவ சேவையில் உள்ள 34 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் எனத் தெரியவந்துள்ளது.
தனது ஐந்து வயது மகனும் கணவரும் வீட்டில் வசித்து வந்தாகவும் மேற்படி பெண் சம்பவ தினம் மாலை 4 மணியளவில் நித்திரைக்குச் சென்றதாகவும், நீண்டநேரம் ஆகியும் விழிக்காத படியால் இரவு நேரம் அவரை தட்டி எடுப்பிய போது பேச்சு மூச்சற்று அவர் காணப்பட்டதாகவும், கணவர் தெரிவித்துள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில் அயலவர்கள் உதவியுடன் அம்பியூலண்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்து அம்பியூலண்ஸ் வந்த போது அப் பெண் மரணித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதனை அடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாணைகளை நடத்தி வருகின்றனர்.

