இந்தோனேசிய தீவான பாலியில் இந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
சுற்றுலா மையத்தின் தலைநகரான டென்பசாரில் இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் 125 மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த தணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
500க்கும் மேற்பட்டோர் பாடசாலைகள் மற்றும் பள்ளிவாசல்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பெய்த கடும் மழையால் டென்பசார் மற்றும் பாலியின் எட்டு பிராந்தியங்களில் ஆறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச விமான நிலையம் உட்பட முக்கிய வீதிகள் தடைபட்டுள்ளன. சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
ஆறுகள் கரைகளை புரண்டதால் மக்கள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதால் பெரும் அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினர் எவரும் இல்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய பல கட்டிடங்களில் இருந்து மீட்புப் பணியாளர்கள் இன்னும் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். மேலும் வீதிகளில் சேறு, குப்பைகள் மற்றும் பாறைகளை அகற்ற சுமார் 500 இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
“மழையின் உச்சம் கடந்துவிட்டது. பொதுவாக தண்ணீர் வடிந்துவிட்டது. தற்போது, வீதிகளில் இருந்து சேற்றை அகற்றுவதில் கவனம் செலுத்துகிறோம்.
இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காராவிலும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

