மட்டக்களப்பிலிருந்து தினமும் நவகிரி நகர் வரை போக்குவரத்தில் ஈடுபட்ட வந்த மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து , அப் பகுதிக்குரிய சேவையை ஒரு வார காலத்திற்கு அதிகமாக நிறுத்தியதாக தெரிவித்து , அப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் , பாடசாலை மாணவர்கள்,மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இணைந்து புதன்கிழமை( 10 ) அன்று பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
DS மாமா பேருந்து வண்டிய மீண்டும் பெற்றுதாங்க நாங்களும் ஏனையோரைப்போன்று படிக்க வேண்டும் , எமது கிராம மக்களின் குரல் தான் RDS … எமது குரலை அடக்கும் பாசிச அரசியல் வாதிகளே ஒழிக , அரசாங்கமே எங்களுடைய அடிப்படை உரிமையான போக்குவரத்தின் பறிக்காதே ,காலையில் யானைத் தொல்லை மாலையில் மாட்டு தொல்லை பாடசாலை செல்வதும் போக்குவரத்து தொல்லை ஆகிவிட்டது என்ற பல வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச சபைக்கு முன்னால் ஒன்று கூடிய பொதுமக்கள், கோஷங்களை எழுப்பியவாறு,பதாகைகளை ஏந்திய வண்ணம் வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச செயலகம் வரை சென்றனர். பிரதேச செயலகத்திற்கு முன்னால் வைத்து இலங்கை போக்குவரத்து சாலையின் போக்குவரத்து சேவையை துரிதப்படுத்தி தருமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

