ஏறாவூரில் நான்கு கைக்குண்டுகள் மீட்பு

79 0

மட்டக்களப்பு – ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில் உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில்  புதைக்கப்பட்ட நிலையில்  செவ்வாய்க்கிழமை (09) அன்று நான்கு கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுதங்கள் இருப்பதாக பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஏறாவூர் நீதவான் நீதிமன்ற உத்தரவு பெற்று குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர்  இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே தலைமையில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது சுமார்  ஐந்து அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மூடியிடப்பட்ட வாளி ஒன்றினுள் இருந்து  நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.