
நெதர்லாந்தில் தமிழர்விளையாட்டுப் போட்டி 06.09.2025 சனிக்கிழமை அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. காலை 09.30 மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வு தேசியக் கொடியேற்றம் பொதுச்சுடரேற்றல் அகவணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து விளையாட்டுகளுக்கான பதிவுகளும் ஆரம்பமானது.
ஆரம்ப விளையாட்டாக உதைபந்தாட்டத்துடன் தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டு பெரியவர்களுக்கான விளையாட்டு மற்றும் எமது தாயாக விளையாட்டுகளான கிளித்தட்டு, கயிறுழுத்தல் சங்கீதக்கதிரை என வெகு சிறப்பாக மக்கள் கூட்டத்துடன் நடைபெற்றது. அதுமட்டுமின்றி எமது தாயக உணவுகள், கலாச்சார உடைகள் என பல அங்காடிகளும் சிறப்பாக அமைந்திருந்தன.
மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாட்டுத் திடலில் காணப்பட்டனர்.
நிறைவாக வெற்றி பெற்ற கழகங்கள் மற்றும் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்குப் பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
மிகவும் எழுச்சியாகவும் குதூகலமாகவும் நடைபெற்று முடிந்த விளையாட்டுகளைத் தொடர்ந்து
தேசியக் கொடி கையேந்தலுடன் எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற கோசத்துடன் நிறைவுபெற்றது.












