பியல் மனம்பேரிக்கு தடுப்பு காவல் உத்தரவு

78 0

மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பியல் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் இன்று (7) அனுமதி வழங்கியுள்ளது.

இன்று காலை வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​அவரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

 

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான பியல் மனம்பேரி நேற்று (6) கைது செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் (05) மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ​​மித்தெனிய – தலாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோ கிராம் இரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.