ஆசிரியரை பலமுறை கத்தியால் குத்திய 17 சிறுவன்! துப்பாக்கியால் சுட்டு பிடித்த பொலிஸார்

75 0

ஜேர்மனியில் 17 வயது சிறுவன் ஆசிரியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் எசென் நகரில் அமைந்துள்ள தொழிற்கல்வி பள்ளியில் 17 வயது சிறுவன் 45 வயதுடைய ஆசிரியரை கத்தியால் பலமுறை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யும் நடவடிக்கையின் போது சம்பந்தப்பட்ட சிறுவன் காவல்துறையால் சுடப்பட்டு காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிலையில், சிறுவன் தாக்குதலுக்கு பிறகு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

 

இதையடுத்து ஆசிரியர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

அதே சமயம் தப்பியோடிய நபரை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக களமிறங்கினர், காலை 11.15 மணிக்கு தப்பியோடிய சிறுவனை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

சிறுவனை கைது செய்ய முயற்சித்த போது சிறுவன் கத்தியை வெளியே எடுத்து தாக்க முயன்றதால், காவல்துறையினர் துப்பாக்கியை பயன்படுத்தினர்.

பின்னர் அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.