மித்தெனியவில் கைக்குண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் மீட்பு

47 0

 

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மித்தெனிய தலாவ பகுதியில், ஐஸ் வகை போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து கைக்குண்டுகள் மற்றும் பல்வேறு வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து, சனிக்கிழமை (06) இந்த மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 5 கைக்குண்டுகள், T-56 துப்பாக்கிக்கான 17 தோட்டாக்கள், மேலும் பிற துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்கள் ஆகியவை, அப்பகுதியில் உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தருகில் புதிதாக வெட்டப்பட்ட கானிலிருந்து மீட்கப்பட்டன.