தாய்லாந்து பாராளுமன்ற தேர்தலில் அனுடின் சார்ன்விரகுலை பிரதமராகத் தெரிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்தின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் வம்சத்தைச் சேர்ந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா, கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையைக் கையாண்டதில் நெறிமுறை மீறல்களுக்காக கடந்த வாரம் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த பதவிக்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு இன்றையதினம் வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப்பின் மூலம் தாய்லாந்து நாடாளுமன்றம் பழமைவாத எதிர்க்கட்சியான பூம்ஜைதாய் கட்சியின் தலைவர் அனுடின் சார்ன்விரகுலை நாட்டின் பிரதமராகத் தெரிவு செய்துள்ளது.

