கிணற்றில் இறங்கியவர் மயக்கமடைந்து உயிரிழப்பு

72 0

கல்தோட்டை, கல்டெமியாய பகுதியில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த கிணற்றைச் சுத்தம் செய்யச் சென்ற 39 வயது நபர் ஒருவர், மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.

பலங்கொட, முல்கம பகுதியைச் சேர்ந்த இவர், இரண்டு நண்பர்களுடன் கிணற்றைச் சுத்தம் செய்ய முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கல்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த கிணற்றில் நச்சு வாயுக்கள் தேங்கியிருந்ததால் அவர் மயக்கமடைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் குறித்து கல்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.