தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை!

54 0

தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை, தாய்லாந்து நீதிமன்றம், பதவியில் இருந்து நீக்கியதன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, நாட்டை வழிநடத்த, தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாசாய் நாடாளுமன்றத்தை கலைக்க மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆளும் கட்சியால் புதன்கிழமை (நேற்று) சமர்ப்பிக்கப்பட்ட சபை கலைப்பு ஆணை, அரச அனுமதிக்காக காத்திருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் சொராவோங் தியென்தோங் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து நாடாளுமன்றத்தில், ஒரு பிரதான எதிர்க்கட்சியான, மக்கள் கட்சி, பியூ தாய் போட்டியாளரான பூம்ஜைதாய் கட்சியை அடுத்த அரசாங்கத்தை அமைக்க ஆதரிப்பதாக கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான நடவடிக்கை விரைவாக எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.