யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய பிரதேச செயலாளர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிகழ்வு இன்று(3) காலை 10 மணி அளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் சாவகச்சேரி பிரதேச செயலக பிரதேச செயலாளராக கடமை ஆற்றிய உஷா சுபலிங்கம் நாளை புதன்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலராக பணியாற்றிவந்த கு.பிரபாகரமூர்த்தி யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

