இன்டர்போல், இந்தியா மற்றும் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு இலங்கை பொலிஸார் நன்றி தெரிவிப்பு !

85 0

இந்தோனேசியாவில் பாதாள உலகக்குழுகளின் தலைவர்களை கைதுசெய்யும் பணியை வெற்றிபெறச் செய்வதற்கு இன்டர்போல், இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் அயராத முயற்சிகள், ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்காக இலங்கை பொலிஸார் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் தொடர்பு இல்லையென்றால், மிகவும் தேடப்படும் குற்றவாளிகளை இலங்கை பொலிஸாரால் பிடிக்க முயற்சித்திருப்பது பயனற்றதாக இருந்திருக்கும் என சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை பொலிஸ் திணைக்களம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நமது நாடுகளின் முன்னேற்றத்திற்கான நம்பகத்தன்மை, பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இன்டர்போல், இந்தியா மற்றும் இந்தோனேசியா எங்களுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.

நமது பிராந்தியங்களில் தற்போதும் எதிர்காலத்திலும் காணப்பட்ட எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையையும் தடுக்க உதவவும், கூட்டாண்மைக்கும் ஏனையவற்றுக்கு கைகொடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

இந்த நடவடிக்கையை வெற்றிபெறச் செய்ய தியாகம் செய்த, அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என மேலும்  குறிப்பிட்டுள்ளனர்.