ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப்பயணம் நான்காம் நாளான இன்று காலை (31- 08-2025) நெதர்லாந்து பிறேடா நகரசபைக்கு முன்பாக குறித்த மனிதநேய ஈருருளிப்பயணம் தொடங்கப்பட்டது . இந்த மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று மதியம் பெல்சியம் எல்லையை சென்றடையும்.இந்த அறவழிப்போராட்டத்தில் அனைவரையும் எழுச்சியோடு கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் வேண்டிநிற்கிறோம்.





