கிளிவெட்டி குமாரபுரத்தில் சஞ்சரிக்கும் காட்டு யானைகள் – மக்கள் கவலை விசனம்

54 0

கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் சஞ்சரித்துள்ள காட்டு யானைகளை விரட்டுவதற்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தை அண்மித்துள்ள குளப் பகுதிக்குள் காட்டு யானைகள் தங்கி நின்று மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், குறித்த யானைகளை விரட்டுவதற்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தபோது தங்களுக்கு போதிய ஆளனி இல்லை என பதிலளித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த யானைகள் மாலையளவில் ஊருக்குள் வருகின்றமையால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.

அருகில் உள்ள தங்கநகர் கிராமத்தில் சனிக்கிழமை (30) யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாகவும் உயிர்சேதம் இடம்பெற்ற பின்னர் அரசு தருகின்ற பணத்தை வைத்து என்ன செய்வது எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே எமது கிராம மக்களின் உயிருக்கு ஆபத்தான முறையில் சஞ்சரித்துள்ள யானைகளை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, அரசாங்கமானது காட்டு யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்கின்ற முறையான திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.