யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், அரச பேருந்து சாலை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அரச பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று (29) காலை 10:00 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அரச பேருந்து ஊழியர்கள் நேற்று (28) முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு, பயணிகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், யாழ் அரச பேருந்து சாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு காண முயற்சித்தார்.
இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, இன்று காலை முதல் யாழ்ப்பாணத்தில் அனைத்து அரச பேருந்து சேவைகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன

