வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவில், பலஹருவ மற்றும் தபரஹார கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் பெரும் பகுதி தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாக ‘அத தெரண’ செய்தி வெளியிட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான மதிப்புமிக்க மரங்கள் வெட்டப்பட்டு எரிக்கப்பட்டதாகவும், பல ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காடழிப்பு நடவடிக்கைகளுடன், தபரஹார ஏரியில் பாயும் பிரதான கால்வாயை கடத்தல்காரர்கள் அடைத்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது பிரதேசத்தின் நீர்ப்பாசனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் இந்தக் காடழிப்பு மற்றும் கால்வாய் அடைப்பைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

