தமிழர் விளையாட்டு விழா-பெல்சியம்.

102 0

25.08.2025 அன்று தமிழர் விளையாட்டு விழா பெல்சியம் அன்வேற்ப்பன் என்னும் இடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் சிறார்களின் உடல்,உள ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவர்களுடைய விளையாட்டு செயற்திறனை வெளிக்கொணரும் வகையிலும்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் அழிந்து போகாமல் கட்டிக்காக்கும் நோக்குடனும் தமிழர் விளையாட்டுப்போட்டியானது திட்டமிட்ட முறையில் பொதுச்சுடர் ஏற்றல்,மற்றும் தமிழீழத்தேசிக்கொடி ஏற்றல் ,மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சடர் ஏற்றல் ,மலர்வணக்கம் ,அகவண-க்கம் ஆகிய முதன்மை நிகழ்வுகளோடு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வெற்றியீட்டியவர்களிற்கான பதக்கங்களும் ,வெற்றிக்கிண்ண-ங்களும் வழங்கப்பட்டு நிறைவாக தமிழீழத்தேசியக்கொடி கையேந்தலுடன் ,எமது தாரகமந்திரம் “தமிழரின் தாகம் தமிழீழ தாயகத்துடன் நிறைவு பெற்றது.