பிமல் ரத்நாயக்க தெரிவித்த கருத்துக்கள் பிழை!

56 0

நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கி இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுவதாக என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

 

இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று (26) இடம்பெற்ற சம்பவங்கள் பெரும்திரளான மக்களை காட்டி, நீதிமன்றத்தை மிரட்ட முடியாது என்று கூறிய கருத்துக்களை நான் எப்படி பார்க்கின்றேன் என்றால், நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கி இருக்கின்றதா என்ற சந்தேகம் ஒன்று வருகிறது.

இருப்பினும், இவ்வாறு நீதிமன்றங்களை அவமதிக்கும் செயற்பாடுகளை நான் நல்ல செயற்பாடாக பார்க்கவில்லை.

நான் நீதிமன்ற தீர்ப்புக்களை தவறு என்று கூறவில்லை நீதிமன்றங்கள் தொடர்பாக பிமல் ரத்நாயக்க தெரிவித்த கருத்துக்களை பிழை என்று கூறுகின்றேன் என தெரிவித்தார்.