இந்தியாவில் வைரத்தில் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
விநாயகப் பெருமான் ஞானம், வெற்றிகளை தரக் கூடியவர் என்பதால் அனைத்து தரப்பினரும் விநாயகரின் அருளை பெறுவதற்காக பக்தி சிரத்தையுடன் வழிபடுவது உண்டு. விநாயகரை வழிபடும் முறை மிகவும் எளிமையானது என்றாலும், மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.
இன்று 27 ஆம் திகதி புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள், இந்து அமைப்பினர் வழிபாடு நடத்த உள்ளனர். இதையொட்டி விற்பனைக்காக பல்வேறு வடிவங்கள், வண்ணங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வசித்து வரும் மராட்டியத்தை சேர்ந்த மகேஷ் முரகோடா என்ற கலைஞர் வைரத்தில் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார்.
சிலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 இலட்சம் மதிப்பிலான அமெரிக்க வைரத்தில் இந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விநாயகர் சிலையின் எடை 50 கிலோ ஆகும். இந்த விநாயகர் சிலை பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் ராமநகரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் நாடபிரபு கெம்பேகவுடா மித்ரா சபை சார்பில் நிறுவப்படுகிறது. பின்னர் அந்த சிலை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

