யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குற்றக் கும்பலால் கொல்லப்பட்டது பசு மாடு

48 0

யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரமாக இருந்த பசு மாடு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

காரைநகரை சேர்ந்த யோகநாதன் என்பவருக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு வேளைகள் பால் தர கூடிய மாடே படுகொலை செய்யப்பட்டுள்ளது.

மாடு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிமையாளரினால், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை மாடுகளை களவாடி இறைச்சியாக்கும் சட்டவிரோத கும்பல் பசுமாட்டை தடம் வைத்து பிடிக்க முற்பட்ட வேளையே மாடு உயிரிழந்த நிலையில், மாட்டின் உடலத்தை சம்பவ இடத்தில் இருந்து அகற்ற முடியாத நிலையில் மாட்டினை கைவிட்டு சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தீவகம் பகுதிகளில் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களினால் தொடர்ந்து களவாடப்பட்டு அவை இறைச்சியாக்கி விற்பனை செய்யப்படுகின்றது. அதனால் அப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து வருவதால், அவற்றை கட்டுப்பட்டுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.