“ நான் ரணிலை சந்தித்ததை பார்த்தீர்களா?”

46 0

ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிவதற்கு சிறைச்சாலைக்கு நான் சென்றிருந்தால் அதனை நிரூபிக்க வேண்டும் எனக் கோரியுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ,பிரதமர் என்ற வகையில் நினைத்த இடங்களுக்கு செல்ல முடியாது. களவாகவும் செல்ல முடியாது. ஆகையால் நான் சென்றதை நிரூபிக்குமாறு ஊடகங்களுக்கு அவர் சவால் விடுத்தார். ஊவா மாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கில், போலியான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை அற்ற கதைகளை நிரூபித்து காட்டுங்கள். வாய்வழி கதைகளை செய்தியாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். செய்தியை தயாரிக்க வேண்டுமாயின் அதற்கு ஓர் அடிப்படை இருக்க வேண்டும். அரசாங்கத்தில் இருந்து 50 பேர் செல்வதாக கூறுகின்றனர். யார் என்றே என்னால் கேட்க முடியும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையே நாங்கள் நிறைவேற்றி வருகின்றோம். சடத்துக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்க மாட்டோம் என்றார்