செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் Germany, Freiburg நகரத்தில் 19 ஆம் ஆண்டு நினைவுகூரப்பட்டது.

108 0

சிங்கள பயங்கரவாத அரசால் நிகழ்த்தப்படும் தமிழின அழிப்பின் ஒர் அங்கமான செஞ்சோலை படுகொலை யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பால் 24.08.2025 அன்று Freiburg நகரத்தில் உணர்வுப்பூர்வமாக நினைவுகூறப்பட்டது.

இவ் நிகழ்வில் பல தமிழ் மக்கள் கலந்துக்கொண்டு வணக்கம் செலுத்தினார்கள். இத்துடன் குர்து இனமக்கள் பங்களித்து தங்களுடைய ஆதரவு கொடுத்தார்கள். மேலும் வேற்றின மக்களுக்கு சிங்கள பயங்கரவாத அரசு செய்கின்ற தமிழின அழிப்பு தொடர்பாக விளக்கப்படுத்தினதோடு செஞ்சோலை தமிழின அழிப்பு தொடர்பான துண்டுப்பிரசுரமும் தமிழ் இளையோரால் வளங்கப்பட்டது.