மாத்தறையில் கடற்கரைப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரை குறிவைத்து நேற்று திங்கட்கிழமை (25) துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் உணவகத்தில் உரிமையாளர் காயமின்றி தப்பியுள்ளார்.
துப்பாக்கிதாரி சம்பவ இடத்தில் ஒரு ஆயுதம், 4 தோட்டாக்கள் மற்றும் ஒரு பயன்படுத்தப்பட்ட தோட்டாவை விட்டுச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபரின் அடையாளம் இன்னும் வெளியாகவில்லை.
மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

