வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கூறி மோசடி

77 0

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த ஒருவர் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, பூவரசன்குளம் காவல் பிரிவுக்குட்பட்ட தாரேகுளம் பகுதியில் நேற்று காலை இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 15யை சேர்ந்த 41 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொரியாவில் வேலைகளை வாங்கித் தருவதாக கூறி சுமார் 150 பேரிடம் இருந்து 150 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாக தெரியவந்துள்ளது.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கொம்பனி தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.