நைஜீரிய பாதுகாப்புப் படையினரின் தொடர் வான்வழித் தாக்குதல்களில் 35 ஜிஹாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதலானது கேமரூன் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதல்களில் இந்த இறப்புகள் நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியா மீது ஜிஹாதிகள் திட்டமிட்ட தாக்குதலைத் தடுக்க இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் நைஜீரிய பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களில் சுமார் 800 போராளிகள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

