பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் கைது

75 0

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர்  ஐஸ் போதைப்பொருளுடன் மஹபாகே பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (25) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மஹபாகே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மஹபாகே பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்  கம்பஹா – மினுவாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 180 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன், 12 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், மடிக்கணினி, 6 கைக்கடிகாரங்கள், 2 தங்க மாலைகள் மற்றும் தொலைக்காட்சிப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் மஹபாகே பிரதேசத்தில் இடம்பெற்ற 7 திருட்டு சம்பவங்கள் மற்றும் கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற  4 திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்  என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹபாகே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.