யாழில் 75 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

111 0

யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நபர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளை பதுக்கி வைத்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது , சுமார் 75 கிலோ கஞ்சா போதைப்பொருள் அடங்கிய 34 பொதிகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.