4 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் கைது

121 0

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதியில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சேர்ந்த 4 பேர் 10ஆம் திகதி இரவு தங்கச்சிமடம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும், சி.சேகர் என்கிற ராஜ்மோகன் (39), ஆர். கோகிலவாணி (44), ஆர். சசி குமார் (28), எம். நாகராஜ் (68) ஆகியோர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவர்கள் கடல் வழியாக சட்டவிரோதமாக இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்தது.

கோகிலவாணி மற்றும் திரு. சசிகுமார் ஆகியோர் மண்டபம் முகாமில் தங்கியிருந்ததுடன்,  சேகர் 2019இல் இந்தியாவுக்கு வந்துள்ளார். மேலும், நாகராஜ் படகில் மூன்று மாதங்களுக்கு முன் இந்தியா வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது