ஓய்வு பெறும் பிரதம நீதியரசருக்கு பிரியாவிடை!

11 0

ஓய்வுபெறும் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்கான சம்பிரதாய பிரியாவிடை நிகழ்வு இன்று (29) உயர் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

அதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் கலந்து கொண்டிருந்ததாக “அத தெரண” நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உரையாற்றுகையில், இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்நாட்டின் உயர் நீதிமன்றத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் பாதுகாப்பது பலமான சவாலாகும்.

அந்த நம்பிக்கையையும் பொறுப்பையும் மீறாத வகையில் நீதிபதிகள் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த பிரதம நீதியரசர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நீதிபதிகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆதரவு நீதி அமைப்பின் முறையான செயற்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். .