தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2024 லண்டன் எக்‌ஷல்

101 0

கார்த்திகையில் நாம் கண் கரைந்து காத்திருப்பது காலம் கனியும் என்பதற்காகவே கரைந்த கண்களோடு கன காலம் இல்லை – என்று உறங்கும் வீரருக்கு உறுதி சொல்லும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2024 – பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் ஒழுங்கமைக்கப்பட்டு நிகழ்வுகள் லண்டன் எக்‌ஷல் மண்டபத்தில்
ஆரம்பமாகி உள்ளது. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு தென் கிழக்கு பிராந்திய செயற்பாட்டாளர் திரு கிருஷ்ணசாமி ஞானச்சந்திரா அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள். பிரித்தானிய தேசியக்கொடியினை தமிழ் இளையோர் அமைப்பு சமூகப் பணிப் பிராந்திய பொறுப்பாளர் கோபிதா விக்னேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள் தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை அனைத்து உலக தொடர்பகத்தின் பொறுப்பாளர் திரு மகேசன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். அகவணக்கதோடு தேசியத்தலைவரின் சிந்தனை வரிகளோடு ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை ஏற்ற காத்திருக்கிறார்கள்.