வவுனியா அலைகல்லுப்போட்டகுளம் உடைப்பு : மக்களே அவதானம்

168 0
வவுனியா அலைகல்லு போட்ட குளம் உடைப்பெடுத்ததால் மாளிகை குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக மாளிகை குளம் உடைப்பெடுக்குமாக இருந்தால் ஆறுமுகத்தான் புதுக்குளம், மாளிகை, சேமமடு கிராம மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் கால்நடைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.