க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு!

22 0

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நவம்பர் 27, 28 மற்றும் 29ஆம் திகதிகளில் க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறமாட்டாது.

இந்த மூன்று நாட்களுக்கான பரீட்சைகள் முறையே எதிர்வரும் டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.