தமிழீழத் தேசியத் தலைவருக்கு 70 ஆவது அகவை வாழ்த்து-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி.

137 0

உறுமி மேளம் உறுமுதடா புலியுறுமுதடா !
உறுமும் புலி பாயுதடா நிலம் அதிருதடா!
மறத்தலைவன் பிறந்த நாளை வாழ்த்தி பாடுங்கடா!
அறமோங்கும் கவிகள் பாடி பாட்டுக் கட்டுங்கடா!
பிரபாகரன் பிறந்த நாளை வாழ்த்தி பாடுங்கடா!
பிரபாகரன் மாண்பதனைப் போற்றிப் பாடுங்கடா!

தண்தமிழர் வேரினிலே உரம்பதித்தவன்
மண்ணதிரும் போர்படைத்து மறம் விதைத்தவன்
கண்ணெதிரே தோன்றும் பகை வேர் தகர்த்தவன்
விண்ணதிரும் வான்படையைத் தோற்றுவித்தவன்
பிரபாகரன் பிறந்த நாளை வாழ்த்திப் பாடுங்கடா!
பிரபாகரன் மாண்பதனை போற்றிப் பாடுங்கடா!

பெண்ணுரிமை ஓங்கிடவே விதி வகுத்தவன்
பெண்படையால் பகை தகர்த்தும் திடம் பதித்தவன்
தாய்மை கொண்ட அன்புருவாய் நமைக்காத்தவன்
வாய்மை கொண்ட தலைவனாகி நிமிர்ந்து நின்றவன்
பிரபாகரன் பிறந்த நாளை வாழ்த்திப் பாடுங்கடா!
பிரபாகரன் மாண்பதனை போற்றிப் பாடுங்கடா!

வையத்திலே தமிழீழப் பெயர் பதித்தவன்
மெய் விழியால் படை நகர்த்தி நடுங்க வைத்தவன்
சொல் முன்னே செயலென்றே பயிற்றுவித்தவன்
செல் நடுவே செவ்விழியை காட்டி நின்றவன்
பிரபாகரன் பிறந்த நாளை வாழ்த்திப் பாடுங்கடா!
பிரபாகரன் மாண்பதனை போற்றிப் பாடுங்கடா!

வல்லமையின் நாயகனை ஏற்றிப் போற்றுவோம்
உள்ளத்திலே ஏற்றிவைத்துப் போற்றிப் பாடுவோம்
நெடுங்காலம் வாழ்கவென்று பரணி பாடுவோம்
அடங்காத தலைவனென்ற திமிரில் வாழ்த்துவோம்
பிரபாகரன் பிறந்த நாளை வாழ்த்திப் பாடுங்கடா!
பிரபாகரன் மாண்பதனை போற்றிப் பாடுங்கடா