கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீதொட்டமுல்ல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கொழும்பு , மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.
இதனையடுத்து கெப் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

