தெய்யந்தர பகுதியில் வர்த்தக நிலையம் தீயில் எரிந்து சேதம்

191 0

மாத்தறை, தெய்யந்தர நகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று தீயில் எரிந்து சேதமடைந்துள்தாக தெய்யந்தர பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (18) நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு பிரதேசவாசி ஒருவர் தொலைபேசியில் அழைப்பு விடுத்து இந்த தீ பரவல் தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர், பொலிஸார் மற்றும் பிரதேச மகக்ள் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

மின்கசிவு காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த தீ பரவலினால் சுமார் 15 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.