கொஹுவலை துப்பாக்கிச் சூடு ; இருவர் கைது

141 0

கொஹுவலை பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஹுவலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவை பிரதேசத்தைச் சேர்ந்த 25 மற்றும் 30 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொஹுவலை பிரதேசத்திற்கு நேற்று (18) இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் கடை ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து கடையின் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

காயமடைந்த கடையின் உரிமையாளர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தெஹிவளை நெதிமால பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.