புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பில் விளக்கம்

12 0

புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பதிலளித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்துடன் சட்டமா அதிபரை நியமிக்க அரசியலமைப்பின் 41வது சரத்து கூறுகிறது என ஜனாதிபதியின் செயலாளர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு அதிகாரம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியை இந்தப் பதவிக்கு மூப்பு அடிப்படையில் நியமிக்க, அரசியலமைப்புத் தேவை இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மிகவும் சிரேஷ்ட அதிகாரிக்கு, சட்டமா அதிபர் பதவி வழங்கும் முறை பின்பற்றப்படவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி சரத் என். சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ் போன்ற சட்டமா அதிபர் பதவிக்கான நியமனங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.