நீதிமன்ற பதிவாளர் சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது!

108 0

கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளரின் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் மற்றுமொரு ஊழியரைக் கைது செய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை (22) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, போலி ஆவணம் தயாரித்து தண்டனை விதிக்கப்பட்ட சந்தேக நபரின் வௌிநாட்டு பயணத்தடையை நீக்கிய குற்றச்சாட்டில் கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.