அழகு ராணியாக காரைதீவு நிவேதிகா தெரிவு

96 0

கொழும்பில் நடைபெற்ற இந்த தெரிவில் முதல் சுற்றில் 120 பெண்கள்  நாடளாவிய ரீதியில் இருந்து கலந்து கொண்டனர். இறுதிச்சுற்றில் 15 பேர் கலந்து கொண்டார்கள்.

அதில் முதலாவது இடத்தில் நிவேதிகா இராசையாவும் இரண்டாவது இடத்தில் ஆச்சர்யா யோகராஜனும் மூன்றாவது இடத்தில்  சந்திரகுமார் விதுர்ஷாவும்   தெரிவு செய்யப்பட்டார்கள்.

கொழும்பில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற விழாவில் தெரிவான அழகுராணிகள் கிரீடம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.