திபெத் மலைப்பகுதியில் விளையும் அரிய வகை கருப்பு வைர ஆப்பிள் விலை ரூ.500

65 0

உலகம் முழுவதும் பல்வேறு வகையான பழங்கள் விளைகின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான சுவை மற்றும் ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளன. இந்த பழங்கள் அனைத்திலும் அரிதான ஒன்று இருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக உள்ளது.

அதுதான் கருப்பு வைர ஆப்பிள். இது பழங்களில் ஒரு தனித்துவமான மாணிக்கம் ஆகும். அடர் ஊதா நிறத்தில் ஆபரணம் போன்ற தோற்றத்துடன், இனிப்பு-புளிப்பு கலந்த சுவை உடையதாக உள்ளது. உட்புறத்தில் வெள்ளை நிறத்தில் உள்ள இதில் இயற்கை குளுக்கோஸ் அதிக அளவில் உள்ளது. ஒரு ஆப்பிள் விலை ரூ.500. திபெத்தில் உள்ள நையிங்ச்சி என்ற மலைப்பகுதியில் விளைகிறது.

திபெத்தின் தட்பவெப்பநிலை மற்றும் வெப்பநிலை உலகெங்கிலும் உள்ள மற்ற இடங்களில் நிலவுவது கடினம் என்பதால் இது திபெத்தில் மட்டுமே விளைகிறது. இதனால்தான் இதன் விலையும் அதிகமாக இருக்கிறது. இது சீனாவில் உள்ள மிகப்பெரிய சில்லறை விற்பனை கடைகளில் மட்டுமே விற்கப்படுகிறது. அதுவும் ஒரு நபருக்கு எத்தனை ஆப்பிளை விற்கலாம் என்பதற்கும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.