12 தோட்டாக்களுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் வாளுடன் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அகலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அகலியா பிரதேசத்தில் புவக்கஸ்துவத்தை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஹொரண இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் ஆவார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது இவ் ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டடுள்ளன.
சந்தேக நபர் இன்று புதன்கிழமை (01) பத்தேகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளார்.

