தங்கத்திலான பழங்கால புத்தர் சிலையை 13,000,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது!

64 0

பெறுமதி வாய்ந்ததாக கருதப்படும் தங்கத்திலான பழங்கால புத்தர் சிலையை 13,000,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற இருவர் ஹல்மில்லவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இவர்களிடமிருந்து புத்தர் சிலையையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முல்லைத்தீவு முகாமின் அதிகாரிகள் குழு மற்றும் புனேவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் புத்தர் சிலையுடன் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

வவுனியா பிரதேசத்தை சேர்ந்த இருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.