பட்டதாரிகள் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

326 0
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிற்கு நேற்றய தினம்  வியாழக்கிழமை வருகை தந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தம்மை வந்து பார்க்கவில்லை என்றும், தமது பிரச்சினைகள் குறித்து கேட்கவில்லை என்றும் ஆத்திரமடைந்த பட்டதாரிகள் முதலமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்போது, பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில், பட்டதாரிகளாகிய நாம் கடந்த 25 நாளாக யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றிய வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் எம்மைச் சந்திப்பார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்.
ஏம்மை சந்திப்பார்கள் என நாம் எதிர்பார்த்திருந்த போதும், எம்மை வந்து சந்திக்காது சென்றுவிட்டார்கள். உண்மையில் எமது இரத்தம் கொதித்துக்கொண்டிருக்கின்றது.
நாம் தெரிவு செய்த எமது முதலமைச்சரே எம்மைக் கண்டுக்காது, எமது பிரச்சினைகளைக் கவனிக்கவில்லை எனின் எம்மைக் கவனிப்பதற்கு வடமாகாணத்தில் யார் இருக்கின்றார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்கள்.