லெபனானிலிருந்து இஸ்ரேலின் இராணுவஇலக்குகளை நோக்கி தாக்குதல்கள்

279 0
image
இஸ்ரேலின் லெபனான் எல்லையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இஸ்ரேலின்  இராணுவஇலக்குகளை நோக்கி இரண்டு ஏவுகணைகளை செலுத்தியதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் தனது அமைப்பை சேர்ந்த மூவது  கொல்லப்பட்டமைக்கு பழிவாங்குவதற்காகவே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தற்போது பதில் எறிகணை தாக்குதல்களை.மேற்கொள்கின்றது.

இரண்டு பகுதிகளின் மீது இஸ்ரேல் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக லெபனான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டையிரா மீது ஆட்டிலறி தாக்குதல்கள் இடம்பெறுகி;ன்றன யரின் மீது பொஸ்பரஸ் எறிகணைகளை இஸ்ரேல் பயன்படுத்துகின்றது என லெபனான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லெபனானில் உள்ள  ஹெஸ்புல்லாவின்  நிலைகள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.