இராணுவ களஞ்சியசாலையில் காணாமல்போன துப்பாக்கி பாதாள உலகக் குழுவினருக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டதா ?

100 0
கரந்தெனிய இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்திலிருந்த T-56 துப்பாக்கி உட்பட பல  தோட்டாக்கள்  காணாமல் போயுள்ளதுடன், இது தொடர்பில் கரந்தெனிய பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தென் மாகாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல கொலைகள் கரந்தெனிய இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்திலிருந்து எடுக்கப்பட்ட T-56 துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக இந்த ஆயுதக் கிடங்கின்  காப்பாளரை  இராணுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கரந்தெனிய ஆயுதக் களஞ்சியசாலைக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சில T-56  தோட்டாக்கள் இராணுவப் பொலிஸாரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த ஆயுதக் களஞ்சியத்திலிருந்து காணாமல் போன ரி- 56 துப்பாக்கி,  பாதாள உலகக் குழுவினருக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.