யேர்மன் நாட்டில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2023.

324 0

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 22வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது கலைபண்பாட்க் கழகத்தின் ஆதரவுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08.10.2023) யேர்மன் நாட்டில் நடைபெற்றது.
பிராங்பேட், முன்சன், சுவேற்ரா ஆகிய மாநிலங்களில் தரம் இரண்டு தொடக்கம் ஆற்றுகைத்தரம், நட்டுவாங்கத் தேர்வு வரை நடாத்தப்பெற்ற இத்தேர்வில் நடனம் – பரதம், இசை (வாய்ப்பாட்டு, வயலின், வீணை, சுரத்தட்டு), மிருதங்கம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நூறு மாணவர்கள் தோற்றியிருந்தார்கள்.

Schwerte

Frankfurt.

München.