மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற ஊழியர்கள் மீது மணல் வியாபாரி உட்பட சிலர் தாக்குதல்!

111 0
மதுரங்குளி, முக்குதொடுவா பிரதேசத்தில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவரை மணல் வர்த்தகர் உட்பட சிலர் கொடூரமாக தாக்கியுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான புத்தளம் மின்சார  சபை அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் இருவரே மின் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முக்குதொடுவா பகுதியில் உள்ள மணல் வியாபாரியின் வியாபார இடத்தில் கடந்த ஒரு மாதமாக மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரத்தை  துண்டித்து விட்டு  அங்கிருந்து வெளியேறி திரும்பிச் சென்று  கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இடத்துக்கு மின்சாரத்தை துண்டிக்க சென்ற இரு  ஊழியர்களும் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு முன்னர் அங்கிருந்த பெண்ணொருவருக்கு தெரிவித்துவிட்டு மின்சாரத்தை துண்டித்ததாக கூறப்படுகிறது.