ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

254 0

ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனன் தேர்தல் பணிமனை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து, தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. இதில் இந்த தொகுதிக்கு ஜெயலலிதா செயல்படுத்த திட்டமிட்டு இருந்த திட்டங்கள் இடம் பெறும். குறிப்பாக இந்த தொகுதியில் தொழில் வளத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எங்களுடைய பிரசாரம் ஜெயலலிதா மரணத்தில் நீதி கேட்கும் வகையில் அமையும். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயற்சிகளை மேற்கொள்வோம். ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீர், கழிவுநீர் பிரச்சினைகளை தீர்க்க போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க உறுதியளிப்போம். மீன்பிடி கட்டமைப்பு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனன் தேர்தல் பணிமனை அலுவலகமும் இன்று திறக்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பணிமனையை திறந்து வைத்து, தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.