ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர்களால் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றல்!

68 0

யாழ்ப்பாணம் – வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர்களால் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் அகற்றும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

பருத்தித்திறை நகரம் மற்றும் பருத்தித்துறை கடற்கரை ஓரம் ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் அகற்றல் செயற்பாடு இடம்பெற்றது.

ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம், ஹாட்லி கல்லூரியின் 185வது ஆண்டு நிறைவு விழாவும் ‘பைக் ரு ஹார்ட்லி’ என்ற பெயரில் வருடாந்த ஒன்றுகூடலினையும் நடாத்த உள்ளது.

‘பிளாஸ்டிக் மாசுபாட்டிலிருந்து நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’ என்பதே இந்த ஆண்டின் தொனிப்பொருளாகும்.

இரண்டு நாள் நிகழ்வாக இன்றும் நாளையும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் காலை பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் அகற்றும் பணியும் 186 மரங்கள் நடுகை என்பனவும் இடம்பெற்றன.